புது தில்லி: தில்லி உட்பட 5 மாநிலங்களில் உள்ள அனைத்து அனல்மின் நிலையங்களையும் தாற்காலிகமாக மூடுமாறு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தில்லியில் ஏற்பட்டுள்ள கடுமையான மாசு பிரச்னையை கட்டுப்படுத்தும் வழக்கில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மேலும், காற்று மாசை கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்தி வைக்குமாறும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
தில்லி, ஹரியானா, உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் காற்று மாசுபாட்டைக் குறைப்பது தொடர்பாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் 10 ஆண்டுகளுக்கு மேல் ஆன டீசல் வாகனங்கள் மற்றும் 15 ஆண்டுகள் ஆன பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து 2 மாதத்துக்கு ஒரு முறை கமிட்டி கூடி சுற்றுச் சூழலை மேம்படுத்துவதற்கான வழிவகைகள் குறித்து ஆராயுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

30 மி.மீ. ஆளில்லா பீரங்கிகள்: டிஆா்டிஓ தயாரிப்பு

இன்றைய ராசி பலன்கள் (26 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! ரிஷப ராசிக்கு நன்மை!

மேஷ ராசிக்கு மகிழ்ச்சி: தினப்பலன்கள்!
பச்சைப் பட்டாணி மசாலா ஃப்ரை
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


