புதுதில்லி : இணைய வழி பண பரிமாற்ற சேவையில் ஈடுபடும் தனியார் நிறுவனமான பேடிஎம் விளம்பரத்தில் பிரதமர் மோடியின் படம் பயன்படுத்தப்படுவது முற்றிலும் வெட்கக்கேடானது என தில்லி முதலவர் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பேடிஎம் என்பது இணைய வழி பண பரிமாற்ற சேவையில் ஈடுபட்டு வரும் தனியார் நிறுவனமானமாகும். இந்த நிறுவனத்தின் விளம்பரம் ஒன்று இன்று தேசிய நாளிதழ்களில் வெளியாகி இருந்தது. இதில் பிரதமர் மோடியின் புகைப்படம் பயன்படுத்தப்பட்டு இருந்தது.
இதற்கு தில்லி மாநில முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கெஜ்ரிவால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்துக்களாவது:
முற்றிலும் வெட்கக்கேடு. நாட்டின் பிரதமர் தனியார் நிறுவன விளம்பரங்களுக்கு மாடலாக செய்லபடுவதை மக்கள் விரும்புவார்களா? நாளை இந்த நிறுவனங்கள் தவறான செயல்களில் ஈடுபடுமானால் அவர்களுக்கு எதிராக யார் நடவடிக்கை எடுப்பது?
அதிக மதிப்பு உள்ள ருபாய் நோட்டுகள் செல்லாது என்று முதல்நாள் அறிவிப்பு வெளியாகிறது.பிரதமரின் இந்த அறிவிப்பினால் பெரும்பயன் பெற உள்ள பேடிஎம் நிறுவனத்தின் விளம்பரத்தில் பிரதமர் இடம்பெறுகிறார். என்ன நடக்கிறது?
இவ்வாறு கேஜரிவால் தனது டிவிட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐபிஎல் வரலாற்றில் மாபெரும் சாதனை; விராட் கோலிக்கு க்ருணால் பாண்டியா புகழாரம்!

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 94.56! 41 காசுகள் சரிவு!

விசில் புரட்சி நடக்கும்; 200+ இடங்களில் தவெக வெல்லும்! செங்கோட்டையன்
கட்சியில் இணைய அழுத்தம்தான் காரணமா? பாஜக மீது திமுக குற்றச்சாட்டு
வீடியோக்கள்

மனைவியை விதவை என விமர்சித்த தொகுப்பாளர்! கோவத்தில் Trump | Jimmy Kimmel
இணையதளச் செய்திப் பிரிவு

திருச்செந்தூரில் விஜய் சாமி தரிசன ரகசியம் ! | TVK Vijay | Tiruchendur Murugan Temple | TN Election 2026
தினமணி செய்திச் சேவை

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு


