மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

திப்பு சுல்தான் ஜெயந்தி விழாவுக்கு எதிர்ப்பு: கர்நாடக முன்னாள் முதல்வர்  எடியூரப்பா கைது!

கர்நாடக மாநிலத்தில் இன்று கொண்டாடப்படுப்படும் திப்பு சுல்தான் ஜெயந்தி விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய, அம்மாநில முன்னாள்  முதல்வர் எடியூரப்பா கைது செய்யப்பட்டார்.

News image
Updated On :10 நவம்பர் 2016, 11:39 am

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் இன்று கொண்டாடப்படுப்படும் திப்பு சுல்தான் ஜெயந்தி விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய, அம்மாநில முன்னாள்  முதல்வர் எடியூரப்பா கைது செய்யப்பட்டார்.

கர்நாடக மாநிலத்தில் இன்று மாவீரன் திப்பு சுல்தான் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இதனை எதிர்த்து போராட்டம் நடத்தவுள்ளதாக கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும், மாநில பாஜக தலைவருமான எடியூரப்பா அறிவித்திருந்தார்.

அதன்படி பாஜக தொண்டர்கள் பெங்களூரில் உள்ள டவுன் ஹாலில் போராட்டம் நடத்தினர். அங்கு சென்ற எடியூரப்பா தொண்டர்களுடன் இணைந்து திப்பு சுல்தான் ஜெயந்தி விழாவிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அப்பொழுது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பாஜக சார்பில் இந்த போராட்டத்தின் மூலம் நாங்கள் முஸ்லிம்களை எதிர்க்கவில்லை. திப்பு சுல்தான் ஜெயந்தி விழாவை மட்டும்தான் எதிர்க்கிறோம்

இவ்வாறு அவர் தெரிவித்தார். இதேபோல் கர்நாடக மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்திய 48 பாஜக தலைவர்கள் கைது செய்ப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.