கொலீஜியம் பரிந்துரைத்த நீதிபதிகள் பட்டியலில் பாதியை நிராகரித்தது மத்திய அரசு

கொலீஜியம் குழு பரிந்துரைத்த 72 நீதிபதிகளின் பெயர்கள் கொண்ட பட்டியலில், பாதிக்கும் மேற்பட்ட நீதிபதிகளின் பெயர்களை மத்திய அரசு நிராகரித்துள்ளது.
கொலீஜியம் பரிந்துரைத்த நீதிபதிகள் பட்டியலில் பாதியை நிராகரித்தது மத்திய அரசு
Updated on
1 min read


புது தில்லி: கொலீஜியம் குழு பரிந்துரைத்த 72 நீதிபதிகளின் பெயர்கள் கொண்ட பட்டியலில், பாதிக்கும் மேற்பட்ட நீதிபதிகளின் பெயர்களை மத்திய அரசு நிராகரித்துள்ளது.

நீதிமன்ற நீதிபதிகளின் நியமனத்துக்காக அமைக்கப்பட்ட கொலீஜியம் குழு, நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் காலியாக இருக்கும் நீதிபதி பணியிடங்களுக்கு புதிய நீதிபதிகளை நியமிக்க 77 நீதிபதிகளின் பெயர்களைப் பரிந்துரைத்து அதற்கான பட்டியலை மத்திய அரசின் ஒப்புதலுக்கக அனுப்பியது.

ஆனால், இந்த பட்டியலை பரிசீலித்த மத்திய அரசு, 77 பேரில் 35 நீதிபதிகளின் நியமனத்துக்கு மட்டுமே ஒப்புதல் வழங்கியுள்ளது. ஆனால், மீதமிருக்கும் 42 நீதிபதிகளின் நியமன பரிந்துரையை மறுபரிசீலனை செய்யுமாறு கொலீஜியம் குழுவுக்கே திருப்பி அனுப்பியுள்ளது.

நீதிபதிகள் நியமனத்தில் கொலீஜியம் குழு அமைக்கப்பட்டதில் மிகப்பெரிய சர்ச்சை நீங்கிய நிலையில், தற்போது இந்த விவகாரம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com