மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர்: அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டும் மக்களவை சபாநாயகர்!

விரைவில் துவங்க உள்ள நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரை  சுமுகமாக நடத்துவதன் பொருட்டு நாளை அனைத்து கட்சி கூட்டத்திற்கு மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அழைப்பு விடுத்துள்ளார்.

News image
Updated On :25 ஜனவரி 2024, 4:55 am

DIN

புதுதில்லி: விரைவில் துவங்க உள்ள நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரை  சுமுகமாக நடத்துவதன் பொருட்டு நாளை அனைத்து கட்சி கூட்டத்திற்கு மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அழைப்பு விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் மாதம் 16-ம் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 16-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த குளிர்கால கூட்டத் தொடரில் சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்துவது குறித்த மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.

அதேபோல எதிர்க்கட்சிகள் தற்பொழுது ரூபாய் நோட்டு பிரச்சனை தொடர்பாக விவாதிக்க வலியுறுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுவைத்தால், கூட்டத்தொடர் அனல்பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே நிலைமையை சமாளிக்க அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அழைப்பு விடுத்துள்ளார். நாளை நடைபெற உள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் முக்கிய கட்சிகளின் மூத்த எம்.பிக்கள் பங்கேற்க வாய்ப்பு உள்ளது. பிரதமர் மோடியும் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.