மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

2000 ரூபாய் நோட்டினால் ஊழலும் இரட்டிப்பாகும்: சீதாராம் யெச்சூரி

புதிதாக வெளியிடப்பட்டுள்ள 2000 ரூபாய் நோட்டினால் ஊழலும் இரட்டிப்பாகும் என்று சீதாராம் யெச்சூரி மாநிலங்களவையில் கூறியுள்ளார்.

News image
Updated On :16 நவம்பர் 2016, 10:45 am


புது தில்லி: புதிதாக வெளியிடப்பட்டுள்ள 2000 ரூபாய் நோட்டினால் ஊழலும் இரட்டிப்பாகும் என்று சீதாராம் யெச்சூரி மாநிலங்களவையில் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்துவிட்டு மக்களவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று மோடி அறிவித்தது குறித்து மாநிலங்களவையில் விவாதம் எடுத்துக் கொள்ளப்பட்டது.

அப்போது பேசிய மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலர் சீதாராம் யெச்சூரி, "இன்னும் 50 நாட்களில் எல்லாம் சரியாகிவிடும் என்று மோடி கூறியுள்ளார். ஆனால், மக்களுக்கு பழைய நோட்டுகளை பெற்றுக் கொண்டு புதிய நோட்டுகளைக் கொடுக்க சரியான மாற்று ஏற்பாடுகள் செய்யப்படவில்லை.

பயங்கரவாதம், கருப்புப் பணம், கள்ள ரூபாய் நோட்டு என எதைச் சொன்னாலும், மோடியின் இந்த நடவடிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது.

500 மற்றும் 1000 ரூபாயை செல்லாது என்று அறிவித்துவிட்டால் ஊழல் ஒழிந்து விடுமா? தற்போது வெளியிடப்பட்டுள்ள ரூ.2000 நோட்டுகளால் ஊழல் இரட்டிப்பாகும்" என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.