அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

காவல்துறையினருடன் துப்பாக்கிச் சண்டை: ஜார்கண்ட்டில் 6 மாவோயிஸ்ட்டுகள் பலி!

காவல்துறையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில்  ஜார்கண்ட் மாநிலத்தில் 6 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

News image
Updated On :23 நவம்பர் 2016, 7:31 am

DIN

ராஞ்சி: காவல்துறையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில்  ஜார்கண்ட் மாநிலத்தில் 6 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

இந்த விவகாரம் தொடர்பாக, ஜார்கண்ட் மாநில காவல்துறை ஐ.ஜியும், செய்தி தொடர்பாளருமான எம்.எஸ்.பாட்டியா செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்ததாவது:

லதேர் மாவட்டம் சிப்பதொஹர் காவல்நிலைய கண்காணிப்பின்கீழ் வரும் பகுதியில், இன்று பாதுகாப்பு படைகளுக்கும் மாவோயிஸ்ட்டுகளுக்கும் கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இதில் 6 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.   

6 மாவோயிஸ்டுகளின்  உடல்களும் ஆயுதங்ககளுடன் கைப்பற்றப்பட்டன. காயம்பட்ட வேறு மாவோயிஸ்ட்டுகள் யாரேனும் அங்கு ஒளிந்திருக்கிறார்களா என்பதைக் கண்டறிவதற்காக தேடுதல் வேட்டை நடந்துவருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.