ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

மகன் திருமணத்தை எப்படி நடத்தினார் பாஜக எம்பி? டிவிட்டரில் கேள்வி எழுப்பும் கேஜ்ரிவால்

பிஜக எம்.பி. மகேஷ் ஷர்மா தனது மகன் திருமணத்தை எப்படி செய்தார் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.

News image
Updated On :28 நவம்பர் 2016, 8:46 am


புது தில்லி: பிஜக எம்.பி. மகேஷ் ஷர்மா தனது மகன் திருமணத்தை எப்படி செய்தார் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அரவிந்த் கேஜ்ரிவால் இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் கேட்டிருப்பதாவது, "மகேஷ் ஷர்மா தனது மகன் திருமணத்தை எப்படி செய்தார்? ஒரு வேளை திருமண செலவுகள் முழுவதையும் ரூ.2.5 லட்சத்திலேயே முடித்துவிட்டாரா? ஏன் என்றால் அவ்வளவு தொகையைத் தானே வங்கியில் இருந்து அதிகபட்சமாக எடுக்க முடியும்?" என்று பதிவு செய்துள்ளார்.

மேலும், ஒருவேளை அவர் தனது மகன் திருமணத்துக்கான செலவு அனைத்தையும் காசோலை மூலமாக செய்வாரா? அவர் வைத்திருந்த பணம் எல்லாம் எப்படி புதிய நோட்டாக மாறியது? என்றும் அடுக்கடுக்க கேள்விகளை பதிவு செய்துள்ளார்.

மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் மகேஷ் ஷர்மாவின் மகனுக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது.

அரவிந்த கேஜ்ரிவாலின் இந்த கேள்விக்கு பதில் அளித்துள்ள மகேஷ் ஷர்மா, "ஆமாம், நான் எனது செலவுகள் அனைத்தையும் வங்கி மூலமே செய்ய உள்ளேன்" என்று பதில் அளித்துள்ளார்.

அரவிந்த கேஜ்ரிவால் தனது பதிவில் மகள் திருமணம் என்று கூறியிருந்தார். ஆனால் மகேஷ் ஷர்மா தனது பதிலில், எனது மகன் திருமணத்துக்கு என்று தவறை சுட்டிக்காட்டியிருந்தார்.

ஏற்கனவே கடந்த வாரம் பல கோடி ரூபாய் செலவு செய்து தனது மகள் திருமணத்தை நடத்திய கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்தன ரெட்டி மீது ஏராளமான புகார்கள் வந்தன.

இந்த நிலையில், பாஜக எம்பியின் மகன் திருமணம் குறித்து, அரவிந்த் கேஜ்ரிவால் முதல் ஆளாகக் கேள்வியை எழுப்பிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.