மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மலப்புரம் என்கவுன்ட்டர் விவகாரம்: இறந்த மாவோயிஸ்ட்டுகள் உடலை பாதுகாக்க நீதிமன்றம் உத்தரவு!

மலப்புரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை அன்று கமாண்டோ படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு மாவோயிஸ்ட்டுகளின்  உடல்களை நாளை வரை பாதுகாத்து வைக்குமாறு...

News image
Updated On :28 நவம்பர் 2016, 10:16 am

மஞ்சேரி: மலப்புரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை அன்று கமாண்டோ படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு மாவோயிஸ்ட்டுகளின்  உடல்களை நாளை வரை பாதுகாத்து வைக்குமாறு மஞ்சேரியில் உள்ள நீதிமன்றம் ஒன்று காவலதுறைக்கு உத்தரவிட்டுள்ளது.

கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள நிலம்பூர் காட்டுப்பகுதியில்,கடந்த வெள்ளிக்கிழமை அன்று கமாண்டோ படையினருடன் நடந்த மோதலில், இரண்டு மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.வழக்கமான சோதனையின் போது , மாவோயிஸ்ட்டுகளை கண்டறிந்தததாகவும், அவர்கள் தங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த துவங்கியதும்தான் வேறுவழியின்றி அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இதனை பல்வேறு மனித உரிமை அமைப்புகள் ஏற்கவில்லை,. இது காவல்துறையினர் நடத்திய போலி என்கவுண்டர் என்று குற்றம் சாட்டின. மேலும் சுட்டுக் கொல்லப்பட்ட இருவரில் ஒருவரது சகோதரர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கை இன்று  விசாரித்த நீதிமன்றம் நாளை  இந்த வழக்கில் தீர்ப்பு வழங்குவதாகவும், அதுவரை இரண்டு உடல்களையும் பாதுகாத்து வைக்குமாறு அரசுத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.உடல்கள் இரண்டும் தற்போது கோழிக்கோடு  மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.