மோடி ஒரு சர்வாதிகாரி: மம்தா கடும் தாக்கு!
பிரதமர் மோடி ஒரு சர்வாதிகாரி போல நடந்து கொள்கிறார் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மேற்கு வங்க மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.


லக்னோ : பிரதமர் மோடி ஒரு சர்வாதிகாரி போல நடந்து கொள்கிறார் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மேற்கு வங்க மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.
செல்லாத ருபாய் நோட்டுக்கள் விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இன்று எதிர்க்கட்சிகளின் பேரணி ஒன்று நடைபெற்றது. இதில் மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். இந்த பேரணியில் சமாஜ்வாதிக்கட்சித் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
புழக்கத்தில் உள்ள பழைய 500 மற்றும் 1000 ருபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்திருப்பது, நாடு முழுவதும் பணத்தட்டுப்பாட்டை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் நெருக்கடி நிலை போன்றதொரு சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்த அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என்ற வேண்டுகோளை நிராகரித்திருப்பதன் மூலம் மோடி ஒரு சர்வாதிகாரி போல செயல்படுகிறார். தற்பொழுது திரிணாமுல் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் ஒன்றாக இணைந்து செயல்படுகின்றன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...