மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா!
காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி இன்று வீடு திரும்பினார்.


புதுதில்லி: காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி இன்று வீடு திரும்பினார்.
காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி காய்ச்சலில் அவதிப்பட்டு வந்ததன் காரணமாக, தில்லியில் உள்ள புகழ் பெற்ற சர் கங்கா ராம் மருத்துவமனையில் திங்கள்கிழமையன்று அனுமதிக்கப்பட்டார்.
காய்ச்சல் சரியானதன காரணமாக, சோனியா காந்தி இன்று வீடு திரும்பியதாக சர் கங்கா ராம் மருத்துவமனையின் இதயம் மற்றும் நுரையீரல் மருந்துகள் பிரிவு ஆலோசகர் அரூப் குமார் பாஸு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் கூட சோனியா காந்தி மருத்துவமனையில் இரண்டு முறை சோதனைக்கு அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...