மாநிலங்களவை எம்.பியான மகாபாரத திரவுபதி!
மகாபாரதம் தொலைக்காட்சித் தொடரில் திரவுபதியாக நடித்து புகழ்பெற்ற மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நடிகை ரூபா கங்குலி, பாரதிய ஜனதா சார்பாக மாநிலங்களவை எம்.பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


புதுதில்லி
மகாபாரதம் டெலிவிஷன் தொடரில் திரவுபதியாக நடித்து புகழ்பெற்ற மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நடிகை ரூபா கங்குலி பாரதிய ஜனதா சார்பாக மாநிலங்களவை எம்.பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு வங்கத்தை சேர்ந்த பிரபலநடிகை ரூபா கங்குலி. இவர் தூர்தர்ஷனில் வெளியான மகாபாரதம் தொலைக்காட்சித் தொடரில் திரவுபதியாக நடித்து லட்சக்கணக்கான மக்களை கவர்ந்தவர். இவர் கடந்த 2015-ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து, மேற்கு வங்காளத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
பாரதீய ஜனதா கட்சி சார்பில் மாநிலங்களவை எம்.பியாக தேர்வு செய்யப்பட்ட கிரிக்கெட் வீரரான நவஜோத் சிங் சமீபத்தில் அந்த கட்சியில் இருந்து விலகினார். அவரது எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்தார். காலியாக இருந்த அந்த பதவிக்கு நடிகை ரூபா கங்குலியை நியமனம் செய்து இன்று மத்திய அரசு அறிவித்தது.
இது குறித்து நடிகை ரூபாகங்குலி கூறுகையில்“ என்னை தேர்வு செய்த பாரதீய ஜனதா தலைவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நாட்டின் வளர்ச்சிக்காக நான் உழைப்பேன். எனக்கு அளிக்கப்பட்ட இந்த பொறுப்பில் நேர்மையாகவும் உண்மையாகவும் இருப்பேன்‘ என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...