சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

அதிரடி தாக்குதல் குறித்து விவாதிப்பது ராணுவத்தை அவமதிப்பதாகும்: வெங்கய்ய நாயுடு

பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் நடத்திய அதிரடித் தாக்குதல் குறித்து விவாதிப்பது ராணுவத்தை அவமதிக்கும் செயலாகும் என்று மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.

News image
Updated On :5 அக்டோபர் 2016, 7:21 am


புது தில்லி: பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் நடத்திய அதிரடித் தாக்குதல் குறித்து விவாதிப்பது ராணுவத்தை அவமதிக்கும் செயலாகும் என்று மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.

"பொறுப்பற்ற வகையில் கூறும் கருத்துக்களுக்கும், கோரிக்கைகளுக்கும் பதில் அளிக்க வேண்டிய அவசியமே இல்லை, அதிரடித் தாக்குதல் குறித்து காங்கிரஸ் உணர்ந்திருப்பதாலேயே, அக்கட்சியின் தலைவர்களின் முறையற்ற கருத்துகளில் இருந்து கட்சி விலகியுள்ளது, அதே போல ஆம் ஆத்மி கட்சியும் அதில் தெளிவாக உள்ளது" என்று செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த வெங்கய்ய நாயுடு கூறினார்.

அதிரடித் தாக்குதலின் தீவிரம் மற்றும் முக்கியத்துவம் குறித்து யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை, இந்திய ராணுவ நடத்தியிருப்பது மிகச் சிறந்த தாக்குதல் என்பதிலும் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

ஆனால், அது குறித்து சந்தேகித்து விவாதங்கள் நடத்துவது ராணுவத்தையே அவமதிக்கும் செயலாகும் என்று வெங்கய்ய நாயுடு கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.