

புதுதில்லி: மூன்று நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் ரணில்விக்ரமசிங்கேவை , இந்திய பிரதமர் மோடி இன்று சந்தித்துப் பேசினார்.
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மூன்று நாள் அரசு முறை பயணமாக செவ்வாயன்று புதுதில்லி வந்தார். இந்தியா மற்றும் இலங்கை இடையே பல்வேறு விஷயங்கள் குறித்து இன்று இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடைபெற உள்ளன.
இதற்கிடையயே ஐதராபாத் இல்லத்தில் தங்கியுள்ள ரணிலை பிரதமர் மோடி இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து , வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி பின்வருமாறு:
'மதிப்புமிக்க அண்டைநாட்டுடன் உறவு மேலும் வலுப்படுத்தப்படுகிறது. ஐதராபாத் இல்லத்தில் இலங்கை பிரதமர் ரணிலுடன், பிரதமர் மோடி சந்திப்பு' என்று செய்தி வெளியிட்டுள்ளார்.
முன்னதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் , இலங்கை பிரதமரை சந்தித்து பேசினார்.இன்று மாலை குடிசையரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியை இலங்கை பிரதமர் மற்றும் குழுவினர் சந்தித்து பேச உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.