மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

காஷ்மீரில் உள்ள பிரிவினைவாதிகளை இயக்குவது பாகிஸ்தான்தான்: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்

ஜம்மு காஷ்மீரில் இந்தியாவுக்கு எதிராக செயல்படும் பிரிவினைவாதிகளை பாகிஸ்தான்தான்  இயக்குகிறது என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் கூறியுள்ளார்.

News image
Updated On :11 அக்டோபர் 2016, 12:43 pm

DIN

ஜம்மு காஷ்மீரில் இந்தியாவுக்கு எதிராக செயல்படும் பிரிவினைவாதிகளை பாகிஸ்தான்தான்  இயக்குகிறது என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் கூறியுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நிறுவப்பட்ட தினம் ஆண்டுதோறும் விஜயதசமி பண்டிகையின் போது 

கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் 91-வது ஆண்டு விழா இன்று அந்த மைப்பின் தலைமையகமான  நாக்பூரில் கொண்டாடப்பட்டது. அந்த நிகழ்வில் மோகன் பாகவத் பேசியதாவது:

மோடி ஆட்சியில் மக்கள் மத்தியில் புதிய நம்பிக்கை உதயமாகியுள்ளது. நம் நாடு மிக வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. நாட்டின் முன்னேற்றம் குடிமக்களின் கைகளில்தான் இருக்கிறது.

ஜெயின் சமூகம் உட்பட பல்வேறு சமூகங்களில் பசு பாதுகாப்பு என்னும் முறை கடைபிடிக்கப்படுகிறது. அதை நாம் மேற்கொள்வதில் தவறு எதுவும் இல்லை. ஆனால் பசு பாதுகாப்பில் ஈடுபடும்போது சட்டத்துக்கு உட்பட்டு நாம் செயல்பட வேண்டும். ஒரு சிலர் பசு பாதுகாவலர்கள் என்று போலியாக தங்களை அடையாளம் காட்டிக் கொண்டு சமூகத்தில் குழப்பத்தை விளைவிக்கின்றனர்.

காஷ்மீரில் உள்ள பிரிவினைவாதிகளை பாகிஸ்தானே பின்னிருந்து இயக்குகிறது. காஷ்மீரின் பெரும்பாலான பகுதிகளில்  அமைதி நிலவுகிறது. ஒரு சில இடங்களில் பிரிவினைவாதிகள் பதற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

எல்லையில் ராணுவத்தினரின் துல்லிய தாக்குதலுக்காக அவர்களை வெகுவாக பாராட்டுகிறேன். ஒரு சிறிய கவனக் குறைவுகூட எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தும். எல்லை பாதுகாப்புப் படையினர் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும். உள்நாட்டுப் பாதுகாப்பினை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். இந்தப் பணியில் மாநில அரசுகளும் மத்திய அரசுக்கு உதவ வேண்டும்

நம் சமூகத்தில் வேறுபாடுகள் அதிகமாக இருக்கிறது. ஆனால், இந்தியாவின் கலாச்சாரமே அதுதான். வேற்றுமையில் ஒற்றுமை காண்பது. நமது கலாச்சார அடையாளத்தை பேணிக் காப்பது நம் அனைவரது கடமையும் ஆகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.