புதுதில்லி: ஜம்மு காஷ்மீருக்குள் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த 15 தற்கொலை படையினர் ஊடுருவியிருக்கலாம் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.
லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்த 15 தற்கொலைப்படை பயங்கரவாதிகள் மூன்று பேர் கொண்ட ஐந்து அணிகளாக பிரிந்து ஊடுருவி உள்ளனர் என்று ராணுவ உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உரி ராணுவ முகாம் தாக்குதலை அடுத்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து செயல்படும் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்தியது. இதற்கு பிறகே காஷ்மீருக்குள் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் ஊருவியிருக்கலாம் என்று அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஐந்து அணிகளில் ஒரு அணி கடந்த 5-ம் தேதி ஹந்த்வாராவில் ராஷ்டிரிய ரைபிள் படையின் மீது தாக்குதல் நடத்திய போது அழிக்கப்பட்டது. மற்றொரு குழு நேற்று பாம்போரில் அரசுக்கு சொந்தமான தொழில் அபிவிருத்தி மேம்பாட்டு நிறுவன கட்டடத்துக்குள் பதுங்கியிருந்து தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.
ஹந்த்வாராவில் கொல்லப்பட்ட மூன்று பயங்கரவாதிகளிடம் இருந்து பெறப்பட்ட ஆவணங்கள் மூலமாக இந்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் பெறப்பட்டு உள்ளது.
பயங்கரவாதிகள் தாக்குல் திட்டத்தை முன்னிட்டு காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் பாதுகாப்பு படையினர் அதி உயர் உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர். ஜம்மு மற்றும் ஸ்ரீநகர்-குப்வாரா நெடுஞசாலைகளில் ராணுவம் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!

கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்பாடு, பட்டாசு வெடிப்பதற்கு புதிய சட்ட முன்வரைவு தேவை!

மாங்குடி மருதனாா் நினைவுத் தூணுக்கு மரியாதை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


