அப்துல்கலாமின் 85-வது பிறந்தநாள்: பிரதமர் மோடி டிவிட்டரில் அஞ்சலி
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் மற்றும் ஏவுகணை மனிதர் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாமின் 85-வது பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.


புது தில்லி: இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் மற்றும் ஏவுகணை மனிதர் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாமின் 85-வது பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,
ஒவ்வொரு இந்திய குடிமகன்களின் எண்ணங்களைக் கவர்ந்த நமது முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளில் எனது மனமார்ந்த அஞ்சலிகளை தெரிவித்து கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பத்ம பூஷன், பத்ம விபூஷன், பரத ரத்னா போன்ற உயர் விருதுகளைப் பெற்றவர். கடந்த 2002-ல் 11-வது குடியரசுத் தலைவராகி நாட்டிற்குப் பெருமை சேர்த்தவர் அப்துல் காலம். ஏவுகணை மனிதரான அப்துல்கலாம் நம்மோடு என்றும் வாழ்ந்து வருகிறார் என்று அவர் தனது டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...