மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

முதல்வரை விமர்சித்த பெண்ணுக்கு 'ஷாக்' ட்ரீட்மெண்ட்: இது மேற்கு வங்க ஸ்டைல்!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜீயை விமர்சித்து முகநூலில் கருத்துக்களை  வெளியிட்ட இளம்பெண்ணுக்கு மேற்கு வங்கத்தில் கிடைத்த ‘பரிசு’ அதிர்ச்சியை ஏற்ப்படுத்தி உள்ளது.

News image
Updated On :18 அக்டோபர் 2016, 10:14 am

DIN

கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜீயை விமர்சித்துமுகநூலில் கருத்துக்களை  வெளியிட்ட இளம்பெண்ணுக்கு மேற்கு வங்கத்தில் கிடைத்த ‘பரிசு’ அதிர்ச்சியை ஏற்ப்படுத்தி உள்ளது.

மேற்கு வாங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ளவர்  ராஜஸ்ரீ சட்டோபாத்யாய் (21). பொறியியல் கல்லூரி மாணவி. இவர் தசரா விழா சமயத்தில் கொல்கத்தாவில் மாநில அரசால் நடத்தப்பட்ட, துர்கா சிலை கரைப்பு ஊர்வலம் குறித்து, தனது முகநூல் பக்கத்தில் வெள்ளிக்கிழமை அன்று சில கருத்துகளைப் பகிர்ந்திருந்தார். அதில் அவர், ' சிலை கரைப்பு உங்களோடு முற்றுபெறட்டும்! டியர் மேடம்' என்ற பொருள்படும் கருத்துக்களை பெங்காலியில் பகிர்ந்திருந்தார்.

இரண்டு நாட்கள்  கழித்து அவர் வீடு முன்பு கும்பலாக திரண்ட ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர், முகநூலில் ராஜஸ்ரீ தெரிவித்த கருத்துக்களுக்கு பகிரங்கமாக பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரினர். ஆனால் ராஜஸ்ரீ அதற்கு மறுத்து விட்டார்.

அதே நாளில், ராஜஸ்ரீயின் வீட்டுக்கு வெளியே, ஐந்தரை அடி  உயரமுள்ள விளம்பர பலகை ஒன்று நிறுவப்பட்டது. அதில் ராஜஸ்ரீயின் முகநூல் பக்கம் 'வெட்கம்' என்ற வாக்கியத்துடன் இடம்பெற்றிருந்தது.

சிலை கரைப்பு தொடர்பான ராஜஸ்ரீயின் கருத்துக்களுக்கு அவரது அண்டைவீட்டார் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக ராஜஸ்ரீ செய்திபத்திரிக்கை ஒன்றிடம் கூறியதாவது .

அரசு ஊழியர்களுக்கு ளை நிதிப்பற்றாக்குறை காரணமாக பஞ்சப்படி உள்ளிட்டபணப்பலனகள் கொடுக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பொழுது, மிகுந்த பொருட்செலவில் இத்தகைய ஊர்வலங்கள்  நடத்தப்படுவது விந்தையாக உள்ளது. இது பொதுமக்கள் பணம். நான் தனிப்பட்ட முறையில் எதற்கும் எதிரியில்லை. ஆனால் இந்த மாநிலத்தின் முடிமகளாக இத்தகைய விஷயங்களை எதிர்த்து கேள்வி கேட்கும்  அதிகாரம் எனக்கு உண்டு.இதுதான் மேற்குவங்கத்தில் ஜனநாயகமா? என்று அவர் கேள்வி எழுப்பினார்.

இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் அனைவரும் அவரது அண்டைவீட்டார்கள் என்பதால் அவர் காவலதுறையிடம் புகார் எதுவும் கொடுக்கவில்லை. ஆனால் தற்பொழுதுஅந்த விளம்பரப்பலகை நீக்கப்பட்டு விட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.