மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

மத்திய அமைச்சர் கார் மீது மர்ம நபர்கள் கல் வீசி தாக்குதல்! 

கட்சி பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்ற மத்திய அமைச்சர் பாபுல்  சுப்ரியோ கார் மீது மர்ம நபர்கள் கல் வீசிய தாக்கிய சம்பவம் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :19 அக்டோபர் 2016, 3:04 pm

DIN

கொல்கத்தா: கட்சி பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்ற மத்திய அமைச்சர் பாபுல்  சுப்ரியோ மீது மர்ம நபர்கள் கல் வீசிய தாக்கிய சம்பவம் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் பாபுல்  சுப்ரியோ. பாஜகவைச் சேர்ந்த இவர் மத்திய அமைச்சர் ஆவார். அவர் இன்று மேற்கு வங்க மாநிலம் அசான்சோல் நகரில் நடைபெற்ற பாஜக பொதுகூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்று கொண்டிருந்தார்.அப்பொழுதுவரது காரை வழிமறித்த மர்ம நபர்கள் திடீரென கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அவரது கார் முற்றிலும் சேதம் அடைந்தது. அவர் மீதும் ஒரு கல் வந்து விழுந்தது.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாக பாபுல் சுப்ரியோ குற்றம் சாட்டியுள்ளார். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.