பரோலுக்கு ரூ.200 கோடி: சஹாரா நிறுவன அதிபருக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை!
தற்போது வழங்கப்பட்டுள்ள பரோலில் தொடர வேண்டுமானால், ரூ.200 கோடியை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என சஹாரா நிறுவன அதிபர் சுப்ரதா ராய்க்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.


புதுதில்லி தற்போது வழங்கப்பட்டுள்ள பரோலில் தொடர வேண்டுமானால், ரூ.200 கோடியை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என சஹாரா நிறுவன அதிபர் சுப்ரதா ராய்க்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.
வாடிக்கையாளர்களின் பணத்தை மோசடி செய்த வழக்கில் சுப்ரதா ராய் தற்போது ஜாமீனில் வெளியில் இருக்கிறார். பரோல் நிபந்தனைகளின் படி,நீதிமன்றத்தில் செலுத்த வேண்டிய ரூ.215 கோடிக்கான வரைவோலையை, சுப்ரதா ராயின் வழக்கறிஞர் கபில் சிபல் இன்று நீதிமன்றத்தில் செலுத்தினார்.
அப்பொழுது தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர், நீதிபதிகள் அணில் தவே மற்றும் சிக்ரி அடங்கிய பெஞ்சானது, சுப்ரதா ராயின் பரோலை நவம்பர் 28-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டனர். மேலும் பரோலை தொடர்ந்து நீட்டிக்க வேண்டுமானால், 28-ஆம் தேதி மேலும் ரூ.200 கோடியை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என்றும் அவர்கள் கபில் சிபலிடம் அறிவுறுத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...