புது தில்லி: மத்திய அமைச்சரவைக் கூட்டங்களுக்கு அமைச்சர்கள் யாரும் செல்போன் கொண்டு வரக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் விஷயங்கள் வெளியே கசிந்து விடாமல் தடுக்கும் வகையில் மத்திய அமைச்சர்களுக்கு இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்திய அமைச்சரவை செயலாளர், அமைச்சர்களின் தனிச் செயலாளர்களுக்கு அனுப்பிய அறிவுறுத்தல் கடிதத்தில், மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்போர்,இனி ஸ்மார்ட்போன், செல்போன் போன்றவற்றை எடுத்து வரக் கூடாது என்றும், இது குறித்து தனிச் செயலாளர்கள், அந்தந்த அமைச்சர்களுக்கு எடுத்துக் கூறுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்றதொரு அறிவுறுத்தல், மத்திய அரசிடம் இருந்து வந்திருப்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.
இதற்கு முன்பு, மத்திய அமைச்சர்கள் தங்களது செல்போன்களை கொண்டு வர அனுமதி வழங்கப்படும். ஆனால், அவற்றை சைலன்ட் மோடிலோ அல்லது ஸ்விட்ச் ஆப் செய்யவோ அறிவுறுத்தப்படுவது வழக்கம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

30 மி.மீ. ஆளில்லா பீரங்கிகள்: டிஆா்டிஓ தயாரிப்பு

இன்றைய ராசி பலன்கள் (26 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! ரிஷப ராசிக்கு நன்மை!

மேஷ ராசிக்கு மகிழ்ச்சி: தினப்பலன்கள்!
பச்சைப் பட்டாணி மசாலா ஃப்ரை
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

