பரிபடா: பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் மீது முட்டை வீச்சு சம்பவம் நடைபெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசாவின் மயூர்பான்ஜ் மாவட்டத்திற்கு ஒரு நாள் பயணமாக முதல்வர் மந்திரி நவீன் பட்நாயக் இன்று சென்றார். சுலியபடா பகுதியில் அமைந்துள்ள அரசு பள்ளியில் நடந்த விழா ஒன்றில் முதல்வர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். நிகழ்வு நடைபெறும் பொழுது பட்நாயக்கு எதிராக மாணவர் காங்கிரஸ் தொண்டர்கள் கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது கூட்டத்திலிருந்த காங்கிரஸ் மாணவர் அணியைச் சேர்ந்த ஒருவர் முதல்வரை நோக்கி முட்டையை வீசினார். ஆனால் அது முதல்வர் மீது விழவில்லை. இதனையடுத்து போராட்டக்காரர்களை போலீசார் கட்டுப்படுத்தினர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஆனால் அதற்குள் முட்டை வீசிய நபரை அங்கிருந்தவர்கள் பிடித்து சரமாரியாக தாக்கினர்.
பின்னர் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட நபர் கைது செய்யயப்பட்டார். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!

கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்பாடு, பட்டாசு வெடிப்பதற்கு புதிய சட்ட முன்வரைவு தேவை!

மாங்குடி மருதனாா் நினைவுத் தூணுக்கு மரியாதை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


