மம்தாவின் மருமகன் உடல்நிலையில் முன்னேற்றம்

மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜியின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருகிறது.
Updated on
1 min read


கொல்கத்தா: மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜியின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருகிறது.

சாலை விபத்தில் படுகாயமடைந்த திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி.யும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகனுமான அபிஷேக் பானர்ஜிக்கு அறுவை சிகிச்சை நடைபெற்ற பிறகு அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவ ரீதியாக அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக மருத்துவ செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலம், சிங்கூரில் கடந்த 18-ஆம் தேதி நிகழ்ந்த விபத்தில் படுகாயமடைந்த அபிஷேக் பானர்ஜி, ஒரு வாரமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com