ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?தமிழ்நாடு என்றாலே சாதனை! இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி! - முதல்வர் பதிவுதொடர்ந்து 2-வது நிதியாண்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி: தமிழ்நாடு சாதனை!திண்டிவனம்: அரசுப் பேருந்து மீது லாரி மோதல்! ஒருவர் பலி; 40 பேர் காயம்! கொடைக்கானலில் சைக்கிள் ஓட்டிய முதல்வர் ஸ்டாலின்! சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புவிதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,040 குறைந்தது!திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடு
/

ஒட்டு கேட்கப்படும் நீதிபதிகளின் தொலைபேசிகள் ; மோடி முன்னிலையில் கெஜ்ரிவால் போட்ட குண்டு!

நீதிபதிகளின் தொலைபேசி அழைப்புகள் மத்திய அரசால் ஒட்டு கேட்கப்படுவதாக, பிரதமர் மோடி முன்னிலையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் தில்லி முதல்வர் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.

News image
Updated On :31 அக்டோபர் 2016, 10:17 am

புதுதில்லி: நீதிபதிகளின் தொலைபேசி அழைப்புகள் மத்திய அரசால் ஒட்டு கேட்கப்படுவதாக பிரதமர் மோடி முன்னிலையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் தில்லி முதல்வர் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.

தில்லியில் உள்ள விஞ்யான் பவனில் திங்களன்று தில்லி உயர் நீதிமன்றத்தின் பொன் விழா கொண்டாட்டம்  நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தாகூர், சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் மற்றும் தில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் கலந்து கொண்டனர் .

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட கேஜ்ரிவால் பேசும் பொழுது, 'தங்களுடைய  தொலைபேசி அழைப்புகள் மத்திய அரசால் ஒட்டுகேட்கப்படுவதாக நீதிபதிகள் சிலர் கவலையில் உள்ளனர் என்பதை நான் அறிவேன். நீதிபதிகளின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்படுகிறது  எனும் செய்தி உண்மையென்றால் அது கடுமையாக கண்டிக்க வேண்டிய  ஒரு செயலாகும்.

இந்த செயல் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் மட்டுமன்றி நீதித்துறையின் சுதந்திரத்தில் அத்துமீறும் செயலுமாகும். உயர் நீதிமன்ற நீதிபதிகளின் நியமனம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் கொலீஜியம் அமைப்பு வழங்கியுள்ள பரிந்துரைகளை 9 மாதங்களாக அரசு கிடப்பில் போட்டுள்ளது. இத்தகைய மோதல் போக்கை கடைபிடிப்பது உகந்தது அல்ல. நீதிபதிகள் நியமனத்தில் காலம் தாழ்த்துவது அரசுக்கும் நீதித்துறைக்கும் இடையேயான இடைவெளியை மேலும் அதிகரிக்கச் செய்யும்' என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், 'ஒரு சட்ட அமைச்சர் என்ற முறையில் தொலைபேசிகள் ஒட்டு கேட்கப்படுவதாக கெஜ்ரிவால் முன்வைக்கும் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுக்கிறேன். நீதிபதிகள் நியமனம் தொடர்பான விவகாரத்தில் சுமுகமான முடிவு எட்டப்படுவதற்கான வழிமுறைகள்  ஆராயப்பட்டு வருகிறது' என்று கூறினார்.

பிரதமர், தலைமை நீதிபதி உள்ளிட்டோர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அர்விந்த் கேஜ்ரிவால் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.