விறகு வாங்க பணமில்லை... குப்பைகளைக் கொண்டு மனைவி உடலை தகனம் செய்த கணவர்

மத்தியப் பிரதேச மாநிலத்தில், உயிரிழந்த தனது மனைவியின் உடலை நல்லடக்கம் செய்ய பணமில்லாத ஏழை ஒருவர் குப்பைகளைக் கொண்டு உடலை எரித்த சம்பவம் தீயாகப் பரவி வருகிறது.
விறகு வாங்க பணமில்லை... குப்பைகளைக் கொண்டு மனைவி உடலை தகனம் செய்த கணவர்
Updated on
1 min read

நீமுச்: மத்தியப் பிரதேச மாநிலத்தில், உயிரிழந்த தனது மனைவியின் உடலை நல்லடக்கம் செய்ய பணமில்லாத ஏழை ஒருவர் குப்பைகளைக் கொண்டு உடலை எரித்த சம்பவம் தீயாகப் பரவி வருகிறது.

மத்தியப் பிரதேசம் நீமுச் பகுதியைச் சேர்ந்த ஜகதீஷ் பில்லின் மனைவி நேஜி பாய் (67) உடல் நிலை பாதித்து கடந்த வாரம் உயிரிழந்தார்.

தனது மனைவியின் மரணத்தை விட, அவரது இறுதிச் சடங்குக்கு தன்னிடம் போதிய பணமில்லை என்ற வருத்தம் அவரை வாட்டியது.

உடனடியாக நகராட்சி அலுவலகங்களுக்குச் சென்று எனது மனைவியின் இறுதிச் சடங்குக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்தேன். யாரும் உதவ முன்வரவில்லை. கவுன்சிலர்களையும் கேட்டுப் பார்த்தேன். யாரும் உதவவில்லை.

என் மனைவி உடலை எரிக்கத் தேவையான விறகுக் கட்டைகள் வாங்க ரூ.2,500 செலுத்துமாறுக் கூறினார்கள். ஆனால், என்னிடம் அவ்வளவு பணம் இல்லை. அவர் உயிரிழந்து 12 மணி நேரமாக எவ்வளவோ போராடியும் எந்த உதவியும் கிடைக்காததால் இறுதியாக, குப்பைகள், காகிதங்கள், கட்டைகளைப் பொறுக்கி அவற்றைக் கொண்டு என் மனைவியின் உடலை எரித்தேன்.

மரம்வெட்டி பிழைக்கிறோம். அது எங்கள் வாழ்வாதாரத்துக்கே போதவில்லை. எங்கள் நிலையைக் கேட்க யாரும் இல்லை என்று வருத்தத்தோடு கூறினார் ஜெகதீஷ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com