ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

கேஜ்ரிவால் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டேன்: அண்ணா ஹசாரே வருத்தம்

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மீதான கடைசி நம்பிக்கையையும் இழந்துவிட்டேன் என்று சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே கூறியுள்ளார்.

News image
Updated On :6 செப்டம்பர் 2016, 7:39 am


தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மீதான கடைசி நம்பிக்கையையும் இழந்துவிட்டேன் என்று சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே கூறியுள்ளார்.

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதும், மற்றொருவர் மீது மோசடி புகார் கூறப்பட்டிருப்பதும் கவலையை ஏற்படுத்தியுள்ளது என்று சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே கூறியுள்ளார்.

'என்னுடன் அரவிந்த் கேஜ்ரிவால் இருந்த போது, கிராம சுயராஜ்யம் என்ற புத்தகத்தை எழுதினார். ஆனால் இதுதான் கிராம சுயராஜ்யமா? இந்த விஷயம் என்னை கவலை அடையச் செய்துள்ளது. அவர் மீதான எனது கடைசி நம்பிக்கையையும் இழந்துவிட்டேன்'.

ஆம் ஆத்மி எம்எல்ஏ சந்தீப் குமார் மீது பலாத்கார வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவத்தை அடுத்து அண்ணா ஹசாரே இந்த கருத்தைத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.