வரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

இந்தியாவில் முகநூல் பயன்படுத்துபவர்களில் நான்கில் ஒருவர் மட்டுமே பெண்: புதிய ஆய்வில் தகவல்!

பிரபல சமூக வலைதளமான முகநூலை இந்தியாவில் பயன்படுத்துபவர்களில் நான்கில் ஒருவர் மட்டுமே  பெண் என்று புதிய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

News image
Updated On :8 செப்டம்பர் 2016, 1:01 pm

பிரபல சமூக வலைதளமான முகநூலை இந்தியாவில் பயன்படுத்துபவர்களில் நான்கில் ஒருவர் மட்டுமே  பெண் என்று புதிய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

உலக அளவில் பிரபலமான சமூக வலைதளங்களில் முகநூலும்  ஒன்று. உலகளாவிய அளவில் முகநூல் பயன்படுத்துபவர்களில் ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கையே அதிக அளவில் காணப்படுவது வழக்கம். இது தொடர்பாக லண்டனில் இருந்து செயல்படும் 'வீ ஆர் சோஸியல்' என்ற ஆலோசனை நிறுவனம் நடத்திய ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. 

இதன்படி இந்தியாவில் முகநூல் பயன்படுத்துபவர்களில் நான்கில் ஒருவர் மட்டுமே பெண். அதாவது மொத்த பயனாளர்களில் 24% பெண்கள் மட்டுமே   முகநூல் பயன்படுத்துகின்றனர்.  பங்களாதேஷை பொறுத்தவரை 23% ஆக உள்ள இந்த அளவு, மிகக்குறைந்த பட்சமாக பாகிஸ்தானில் 22% ஆக உள்ளது. ஒட்டுமொத்தமாக ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் இந்த அளவு 38% ஆக இருக்கின்றது.

இந்த சதவீத மாறுபாட்டிற்கு தெற்கு ஆசிய பகுதிகளில் இரு பாலினத்தவர்க்கிடையே காணப்படும் கடுமையான பாகுபாடே காரணம் என்று அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.