பிரபல சமூக வலைதளமான முகநூலை இந்தியாவில் பயன்படுத்துபவர்களில் நான்கில் ஒருவர் மட்டுமே பெண் என்று புதிய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
உலக அளவில் பிரபலமான சமூக வலைதளங்களில் முகநூலும் ஒன்று. உலகளாவிய அளவில் முகநூல் பயன்படுத்துபவர்களில் ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கையே அதிக அளவில் காணப்படுவது வழக்கம். இது தொடர்பாக லண்டனில் இருந்து செயல்படும் 'வீ ஆர் சோஸியல்' என்ற ஆலோசனை நிறுவனம் நடத்திய ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி இந்தியாவில் முகநூல் பயன்படுத்துபவர்களில் நான்கில் ஒருவர் மட்டுமே பெண். அதாவது மொத்த பயனாளர்களில் 24% பெண்கள் மட்டுமே முகநூல் பயன்படுத்துகின்றனர். பங்களாதேஷை பொறுத்தவரை 23% ஆக உள்ள இந்த அளவு, மிகக்குறைந்த பட்சமாக பாகிஸ்தானில் 22% ஆக உள்ளது. ஒட்டுமொத்தமாக ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் இந்த அளவு 38% ஆக இருக்கின்றது.
இந்த சதவீத மாறுபாட்டிற்கு தெற்கு ஆசிய பகுதிகளில் இரு பாலினத்தவர்க்கிடையே காணப்படும் கடுமையான பாகுபாடே காரணம் என்று அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காளியும் கருப்புதான்!! கருப்பு உடையை விமர்சித்த மோடிக்கு கனிமொழி பதில்!

156 நாள்களின் கடின உழைப்பு..! ரிலீஸ் அப்டேட்டையும் வெளியிட்ட துல்கர் சல்மான்!

சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்! காரணம்?

மு.க. ஸ்டாலினும் ராகுலும் ஒன்றாகப் பிரசாரமா? - ஆர்.எஸ். பாரதி பதில்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


