ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனஸ்?

ரயில்வே ஊழியர்களுக்கு இந்த ஆண்டு 78 நாள் ஊதியம் போனஸாக வழங்கப்படலாம் எனத் தெரிகிறது.
ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனஸ்?
Updated on
1 min read

ரயில்வே ஊழியர்களுக்கு இந்த ஆண்டு 78 நாள் ஊதியம் போனஸாக வழங்கப்படலாம் எனத் தெரிகிறது.
இதுகுறித்து தில்லியில் இந்திய ரயில்வே ஊழியர்கள் தேசிய கூட்டமைப்பு பொதுச் செயலாளர் எம். ராகவய்யா, பிடிஐ செய்தியாளரிடம் கூறியதாவது:
ரயில்வே ஊழியர்களுக்கு அவர்களின் 78 நாள் ஊதியம் போனஸாக வழங்கப்பட வேண்டும் என்று மத்திய அரசிடம் நாங்கள் கோரிக்கை வைத்தோம். இதையேற்று அடுத்த வாரத்தில் தனது அறிவிப்பை மத்திய அரசு வெளியிடலாம் என்று எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.
ஆண்டுதோறும் ரயில்வேயில் பணியாற்றும் 12 லட்சம் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது வழக்கம். அடுத்த வாரம் நடைபெறவுள்ள மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் போனஸ் வழங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்படவுள்ளது. இதன்மூலம், ரயில்வேக்கு ரூ.2 ஆயிரம் கோடி செலவினம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு, ரயில்வே ஊழியர்களுக்கு குறைந்தபட்ச போனஸ் தொகையாக ரூ.8,975 வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com