கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

இஸ்லாமின் புகழைக் கெடுக்க பயங்கரவாதம் முயல்வதை முஸ்லிம்கள் உணர்ந்துள்ளனர்: ராஜ்நாத் சிங்

இஸ்லாமின் புகழைக் கெடுக்க பயங்கரவாதம் முயற்சித்து வருகிறது என்பதை முஸ்லிம்கள் உணர்ந்துள்ளனர் என மத்திய உள்துறை அமைச்சர்

News image
Updated On :3 ஏப்ரல் 2017, 11:07 am

தினமணி

புது தில்லி: இஸ்லாமின் புகழைக் கெடுக்க பயங்கரவாதம் முயற்சித்து வருகிறது என்பதை முஸ்லிம்கள் உணர்ந்துள்ளனர் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் வன்முறையைத் தூண்டிவிடுவது குறித்து தில்லியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
ஒட்டுமொத்த உலகமே இப்போது பயங்கரவாதத்துக்கு எதிராகத் திரண்டுள்ளது. இஸ்லாமின் புகழைக் கெடுக்க பயங்கரவாதம் முயற்சித்து வருகிறது என்பதை முஸ்லிம்கள் உணர்ந்துள்ளனர்.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாதத்தையும், வன்முறையையும் தூண்டுபவர்களுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் உரிய பதிலடி கொடுத்து வருகின்றனர். காஷ்மீரில் கடந்த வெள்ளிக்கிழமை பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்தபோது, பாகிஸ்தானில் இருந்து சமூகவலைத்தளங்கள் மூலம் காஷ்மீர் இளைஞர்கள் மத்தியில் தகவலைப் பரப்பியுள்ளனர். இதையடுத்து, அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து, பயங்கரவாதிகளுக்கு உதவுவதற்காக பாதுகாப்புப் படையினர் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்றார் அவர்.
முன்னதாக, இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய ஜம்மு-காஷ்மீர் மாநில காவல் துறை இயக்குநர் எஸ்.பி.வைத் கூறுகையில், "பயங்கரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர்  தாக்குதல் நடத்தும் இடத்துக்கு வந்து இளைஞர்கள் கற்களை வீசுவது தற்கொலை முயற்சியைத் தவிர வேறு எதுவும் இல்லை' என்றார்.
காஷ்மீர் கல்வீச்சு சம்பவங்கள் குறித்து ராணுவத் தளபதி விபின் ராவத் கூறுகையில், "பாதுகாப்புப் படையினர் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும்போது அவர்கள் மீது கற்களை வீசுபவர்கள் தேசவிரோத சக்திகளாகவே கருதப்படுவார்கள். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.