உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோயிலைக் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களின் தலை துண்டிக்கப்படும் என்று ஹைதராபாத் பாஜக எம்எல்ஏ ராஜா சிங் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாதில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் பங்கேற்று அவர் பேசியதாவது: அயோத்தியில் ராமர் கோயில் கட்டினால் பிரச்னையை எழுப்புவோம் என்று சிலர் கூறிவருகின்றனர். அவர்களின் எச்சரிக்கையை வரவேற்கிறோம். இத்தனை ஆண்டுகாலமாக அப்படிப்பட்ட சதிகாரர்களின் தலையைத் துண்டிக்கத்தான் நாங்கள் காத்திருக்கிறோம்.
தெலங்கானா மாநிலம், ஹைதராபாதில் உள்ள கோஷாமஹால் சட்டப் பேரவைத் தொகுதியின் பாஜக எம்எல்ஏ ராஜா சிங். வலதுசாரி சிந்தனையாளரான இவர், பல முறை கைது செய்யப்பட்டுள்ளார்.