சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ஆதார் எண்ணை பல திட்டங்களுக்கு கட்டாயமாக்கியது ஏன்? உச்சநீதிமன்றம் கேள்வி

ஆதார் அட்டையை கட்டாயமாக்கக் கூடாது என்று உத்தரவிட்டப் பிறகும் அதனை மீற கட்டாயமாக்கியது ஏன் என்று மத்திய அரசுக்கு

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:20 pm

DIN

புதுதில்லி: ஆதார் அட்டையை கட்டாயமாக்கக் கூடாது என்று உத்தரவிட்டப் பிறகும் அதனை மீற கட்டாயமாக்கியது ஏன் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

அரசின் திட்டங்களுக்கு ஆதார் கட்டாயமாக்கப்படுவதற்கு அனைத்து தரப்பிலிருந்தும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டும் நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து ஆதார் அட்டையை கட்டாயமாக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி அரசின் திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டது. மீண்டும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், ஆதார் எண் விவகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையில், அரசின் திட்டங்களுக்கு ஆதார் அட்டையை கட்டாயமாக்கக் கூடாது என்று உத்தரவிட்டப் பிறகும் அதனை மீற கட்டாயமாக்கியது ஏன் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இதற்கு மத்திய அரசின் தரப்பில், அரசின் திட்டங்களுக்கு பான் எண் தவறாகப் பயன்படுத்தப்பட்டு முறைகோடுகள் நடைபெறுவதால் அதனை தடுக்கும் விதமாகவே ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டது என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.