விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கடும் விமரிசனம்: சில ஏசி ரயில்களுக்கு போர்வை வழங்கும் வசதியை நிறுத்த ரயில்வே முடிவு

ரயில் பயணிகளுக்கு வழங்கப்படும் போர்வைகளை துவைப்பதே இல்லை என்ற கடுமையான விமரிசனத்தை எதிர்கொண்ட ரயில்வே நிர்வாகம், சில ஏசி ரயில்களில், போர்வை கொடுக்கும் வசதியை நிறுத்த முடிவு செய்துள்ளது.

News image
Updated On :1 ஆகஸ்ட் 2017, 6:49 am

DIN


புது தில்லி: ரயில் பயணிகளுக்கு வழங்கப்படும் போர்வைகளை துவைப்பதே இல்லை என்ற கடுமையான விமரிசனத்தை எதிர்கொண்ட ரயில்வே நிர்வாகம், சில ஏசி ரயில்களில், போர்வை கொடுக்கும் வசதியை நிறுத்த முடிவு செய்துள்ளது.

ரயில்களும், ரயில் நிலையங்களும் தூய்மையானதாக இல்லை என்றும், ரயில் பயணிகளுக்கு வழங்கப்படும் போர்வைகள் அறிவுறுத்தல்படி துவைக்கப்படுவதில்லை என்றும் சிஏஜி, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் கூறியிருந்தது.

இதையடுத்து, போர்வைகளைத் துவைக்கவும், துவைப்பதை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, சில ரயில் பெட்டிகளுக்கு வழங்கப்படும் போர்வை வசதியையே நிறுத்திவிட முடிவெடுத்துள்ளது.

அதாவது, ரயில்களின் ஏசி பெட்டிகளில் தற்போதிருக்கும் 19 டிகிரி சென்டிகிரேட் என்ற அளவை இனி 24 டிகிரி சென்டிகிரேட் என்ற அளவுக்கு மாற்றி, பயணிகளுக்கு குளிராமல் இருக்கும்படி செய்தால், அவர்களுக்கு போர்வை வழங்க வேண்டிய அவசியம்  இருக்காது என்ற திட்டத்தை சோதனை முறையில் சில ரயில்களில் பரீட்சித்துப் பார்க்க திட்டமிட்டுள்ளது.

அதாவது ஏசி வகுப்பில் பயணிக்கும் ஒரு பயணியிடம், போர்வை போன்றவற்றை சுத்தப்படுத்த ரூ.22 கட்டணமாக வசூலிக்கப்படும் நிலையில், போர்வைகளை சுத்தப்படுத்த ரூ.55 அளவுக்கு செலவாகிறது. எனவே இந்த செலவைக் குறைக்கவே போர்வைகள் வழங்குவதை நிறுத்தவிருப்பதாக ரயில்வே கூறுகிறது.

துவைத்தால்தானே ரூ.55 செலவாகும். துவைக்காத போர்வைக்கு எப்படி ரூ.55 செலவாகும். வாங்கும் ரூ.22ம் கூட லாபம்தானே என்கிறார்கள் சமூக தளங்களில் கருத்துக் கூறும் சாமானியர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.