சாலை விபத்தில் ராஜஸ்தான் அமைச்சர் காயம்; உதவியாளர் பலி
ராஜஸ்தான் மாநில உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் பாபு லால் வர்மா நேற்று திங்கட்கிழமை இரவு நடந்த சாலை விபத்தில் சிக்கி


ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநில உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் பாபு லால் வர்மா நேற்று திங்கட்கிழமை இரவு நடந்த சாலை விபத்தில் சிக்கி காயமடைந்தார். அவருடன் இருந்த அவரது உதவியாளர் உயிரிழந்தார்.
தேசிய நெடுஞ்சாலை 76ல் நேற்று திங்கள்கிழமை இரவு 1 மணியளவில் காரில் அமைச்சர் பாபு லால் வர்மாவும் அவரது உதவியாளர் மோதிலாலும் வந்துகொண்டிருந்தபோது திடீரென ஒரு வலைவில் காரை திரும்பும்போது கார் விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த பாபு லால் வர்மாவும் அவரது உதவியாளர் மோதிலாலும் எம்பிஎஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அமைச்சரின் உதவியாளர் மோதிலால் உயிரிழந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...