நடப்பாண்டு நீட் தேர்வு முடிவுக்கு தடை விதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம்
நடப்பாண்டு நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


நடப்பாண்டு நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீட் தேர்வில் மாறுபட்ட கேள்வி தாளை சிபிஎஸ்இ வழங்கியது ஏன் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும் மாறுபட்ட கேள்வி தாளை வழங்கியது ஏற்புடையது அல்ல எனக் கூறிய நீதிபதிகள் இனிவரும் காலங்களில் இதுபோன்ற தவறு ஏற்படாமல் இருக்க பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய சிபிஎஸ்இ-க்கு உத்தரவு பிறப்பித்தனர். இதையடுத்து நடப்பாண்டு நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய முடியாது எனவும் அப்போது நீதிபதிகள் தெரிவித்தனர்.
2017-18 கல்வியாண்டில் மருத்துவப் படிப்புகளுக்கான 'நீட்' தேர்வை கடந்த மே 7-ஆம் தேதி சிபிஎஸ்இ நடத்தியது. ஆங்கிலம், ஹிந்தி மட்டுமின்றி தமிழ், மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி உள்பட பல்வேறு மாநில மொழிகளில் இந்தத் தேர்வு நடத்தப்பட்டது. சுமார் 11 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர்.
இத்தேர்வில் ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இருந்த வினாக்களுக்கும் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் இடம் பெற்ற வினாக்களுக்கும் மிகுந்த வேறுபாடு இருந்ததாகவும் மாநில மொழி வினாக்கள் மிகவும் கடுமையாக இருந்ததாகவும் கூறி ஒரு பிரிவு மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, 'நீட்' தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட்) முடிவுகளை வெளியிட அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...