சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

48 மணி நேரத்தில் 30 குழந்தைகள் பலி: நெஞ்சை அதிரச் செய்யும் சம்பவம்!

உத்தரப்பிரதேச மாநில அரசு மருத்துவமனை ஒன்றில் ஆக்சிஜன் குறைபாட்டால் கடந்த இரண்டு நாட்களில் 30 குழந்தைகள் பலியான  சம்பவம் நடந்துள்ளது.

News image
Updated On :11 ஆகஸ்ட் 2017, 2:16 pm

DIN

லக்னோ: உத்தரப்பிரதேச மாநில அரசு மருத்துவமனை ஒன்றில் ஆக்சிஜன் குறைபாட்டால் கடந்த இரண்டு நாட்களில் 30 குழந்தைகள் பலியான  சம்பவம் நடந்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் அரசு மருத்துவமனை ஒன்று உள்ளது. இங்கு மூளை தொடர்பான நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் ஆக்சிஜன் சிலிண்டர் செயல்பாடு பிரச்சினையின் காரணமாக கடந்த  48 மணி நேரத்தில், 30 குழந்தைகள் மரணம் அடைந்துள்ளனர்.

மனதினை அதிரச் செய்யும் இந்த சம்பவத்திற்கு கரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.