கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!! மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

ஆதார் தீர்ப்பு மிகச்சரியே: மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் வேணுகோபால் கருத்து!

ஆதார் வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பு மிகச்சரியே என்று மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் வேணுகோபால் கருத்துத் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:44 pm

DIN


புது தில்லி: ஆதார் வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பு மிகச்சரியே என்று மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் வேணுகோபால் கருத்துத் தெரிவித்துள்ளார்.

தனிநபர் ரகசியம் காப்பது அடிப்படை உரிமையே என ஆதார் வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று பரபரப்புத் தீர்ப்பினை அளித்துள்ளது.

தனிநபர் ரகசியம் என்பது அடிப்படை உரிமை இல்லை என்ற மத்திய அரசின் வாதத்தை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.

ஆதார் விவரங்களால் தனிமனித சுதந்திரம் பறிக்கப்படுவதாகத் தொடரப்பட்ட வழக்கில், தனிமனித சுதந்திரம் என்பது அனைவருக்கும் முக்கியமானது என்று 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பளித்துள்ளது. இதில், 9 நீதிபதிகளுமே ஒருமித்த கருத்தை தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தனிநபர் அடிப்படை உரிமையை அரசியல் சாசனத்தின் 21வது பிரிவு உறுதி செய்கிறது என்று நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் வேணுகோபால் ஆதரவு தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகச் சரியே என்றும் அவர் கருத்துக் கூறியுள்ளார்.

இந்தியாவில் மத்திய, மாநில அரசுகளால் வழங்கப்படும் சமூக நலத் திட்டங்களுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.