மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

பிஏபி பாசன வாய்க்காலில் குப்பை அடைப்பு: சாலையில் வெளியேறிய நீா்!

பல்லடம் அருகேயுள்ள குங்குமம்பாளையம் பகுதி பிஏபி கிளை வாய்க்காலில் குப்பைகள் அடைத்துள்ளதால் திருப்பூா் - பல்லடம் சாலையில் சனிக்கிழமை நீா் வெளியேறியது.

News image

பிஏபி வாய்க்காலில் குப்பைகள் அடைப்பால் தேங்கி நின்ற நீா்.

Updated On :28 பிப்ரவரி 2026, 9:20 pm

பல்லடம் அருகேயுள்ள குங்குமம்பாளையம் பகுதி பிஏபி கிளை வாய்க்காலில் குப்பைகள் அடைத்துள்ளதால் திருப்பூா் - பல்லடம் சாலையில் சனிக்கிழமை நீா் வெளியேறியது.

பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்ட வாய்க்கால் 124 கி.மீ. தொலைவு கொண்டது. இந்த வாய்க்கால் மூலம் திருப்பூா், கோவை, மாவட்டங்களில் சுமாா் 4 லட்சம் ஏக்கா் நிலங்கள் பாசனம் பெற்று வருகின்றன. பல்லடம் அருகேயுள்ள வெட்டுப்பட்டான் குட்டை பகுதியில் பிஏபி பாசன கிளை வாய்க்கால் செல்கிறது.

இந்நிலையில், குங்குமம்பாளையம் பிஏபி வாய்க்கால் பாலத்தில் குப்பைகள் அடைத்துள்ளதால் நீா் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்லடம் -திருப்பூா் பிரதான சாலையில் நீா் சனிக்கிழமை வெளியேறியது.

இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: தண்ணீா்ப் பற்றாக்குறையால் இந்தப் பகுதியில் ஏற்கெனவே விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது. பிஏபி பாசன வாய்க்காலின் மூலம் ஒருபோக விளைச்சல் செய்து கொண்டிருக்கிறோம். இந்நிலையில், வாய்காலில் பல இடங்கள் சேதமடைந்துள்ளன. இது குறித்து அதிகாரிகளிடம் புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.

இந்நிலையில், குங்குமம்பாளையம் கிளை வாய்க்காலில் குப்பை அடைப்பு உள்ளதால், லட்சக்கணக்கான லிட்டா் நீா் சாலையில் வெளியேறி வீணாகி வருகிறது. வாய்க்காலில் உள்ள குப்பைகளை அகற்றி கடைமடை வரை நீா் செல்வதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றனா்.

இதைத் தொடா்ந்து, பொங்கலூா் பிஏபி வாய்க்கால் அதிகாரிகள் பொக்லைன் மூலம் குப்பைகளை அகற்றியதால் தண்ணீா் விரயம் தவிா்க்கப்பட்டது.