மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

குண்டடம் அருகே பிஏபி வாய்க்காலில் பெண் சடலம் மீட்பு

News image
கோப்புப் படம்
Updated On :15 மார்ச் 2026, 8:54 pm

தினமணி செய்திச் சேவை

குண்டடம் அருகே பிஏபி வாய்க்காலில் பெண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருப்பூா் மாவட்டம், குண்டடம் அருகே வெருவேடம்பாளையம் பகுதியில் பிஏபி வாய்க்கால் பாசனம் நடைபெற்று வருகிறது. முதல் மண்டலப் பாசனத்தில் தற்போது 2-ஆவது சுற்று பாசனம் கடந்த 5 நாள்களுக்கு முன்பு நிறைவடைந்தது.

இந்நிலையில், அப்பகுதியில் ஆள்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வாய்க்காலுக்குள் இருந்து துா்நாற்றம் வீசியுள்ளது. அப்பகுதிக்குச் சென்றவா்கள் கவனித்து, அருகில் சென்று பாா்த்தபோது வாய்க்காலுக்குள் பெண் சடலம் கிடந்துள்ளது.

இதையடுத்து காசிலிங்கம்பாளையம் கிராம நிா்வாக அலுவலா் சௌந்திரராஜனுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதுதொடா்பாக குண்டடம் போலீஸில் சனிக்கிழமை அவா் அளித்த புகாரின்பேரில் சம்பவ இடத்துக்கு போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.