அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை: பாதுகாப்புப்படை வீரர்கள் 3 பேர் வீர மரணம்

காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதிகள் தாக்குதலில் பாதுகாப்பு

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:44 pm

DIN

புல்வாமா: காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதிகள் தாக்குதலில் பாதுகாப்பு படைவீரர்கள் 3 பேர் வீரமரணம் அடைந்துள்ளார்.

காஷ்மீர் எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இன்று காலை சுமார் 4.30 மணியளவில் புல்வாமா மாவட்ட எல்லைப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலில், 4 மத்திய பாதுகாப்பு படை வீரரும், மற்றொரு போலீஸாரும் காயமடைந்தனர்.

இந்த தாக்குதலில் 2 அல்லது 3 தீவிரவாதிகள் தங்கியிருக்கலாம் என கூறப்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் கூடுதல் பாதுகாப்புப்படையினர் வரவழைக்கப்பட்டு தீவிரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டை நடந்து வந்தது. அப்போது, பதுங்கி இருந்த தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்பு படைவீரர்கள் 3 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.