பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கேரள மாநிலத்தவர் மீது பினராயி விஜயனுக்கு உண்மையான அக்கறை கிடையாது: தருண் விஜய்

கேரள மாநிலத்தவர் மீது அந்த மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கு உண்மையான அக்கறை கிடையாது என்று பாஜக முன்னாள் எம்.பி. தருண் விஜய் விமர்சனம் செய்துள்ளார்.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2017, 7:16 pm

DIN

கேரள மாநிலத்தவர் மீது அந்த மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கு உண்மையான அக்கறை கிடையாது என்று பாஜக முன்னாள் எம்.பி. தருண் விஜய் விமர்சனம் செய்துள்ளார்.
ஹரியாணாவில் தேரா சச்சா சௌதா அமைப்பினரின் கலவரத்தைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில், ஹரியாணாவில் வசிக்கும் கேரள மக்களின் பாதுகாப்புக்குத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று விஜயன் கேட்டுக் கொண்டிருந்தார்.
இதை பாஜக முன்னாள் எம்.பி.யும், அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான தருண் விஜய் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
ஹரியாணாவில் வசிக்கும் கேரள மக்கள் மீது போலி அக்கறை காட்டும் பினராயி விஜயன், எனது கேள்விகளுக்கு முதலில் பதிலளிக்க வேண்டும். கேரளத்தில் அந்த மாநில மக்களால் மரியாதையுடனும், பாதுகாப்பாகவும் வாழ முடிகிறதா? நாட்டிலேயே மலையாள மொழி பேசும் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலம் எது என்று கேள்வி எழுப்பினால், அது துரதிருஷ்டவசமாக, கேரளம்தான். கேரளத்திலேயே மலையாள மொழி பேசும் மக்களால் பாதுகாப்பாக வசிக்க முடியவில்லை.
ஹரியாணா மாநிலமானது, அனைத்து மாநில மக்கள், பிற நாட்டு மக்களுக்கு பாதுகாப்பான இடமாகத் திகழ்கிறது. ஆனால், கேரளமோ, பிற மாநில மக்களை ஈர்ப்பதிலும், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதிலும் தோல்வியடைந்துவிட்டது. பினராயி விஜயன் ஆட்சியின்கீழ், மலையாள மொழி பேசும் மக்கள் கொடூரமாகத் தாக்கப்படுகின்றனர். பிரபல மலையாள நடிகை காரில் கடத்திச் செல்லப்பட்டு, கொச்சியில் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். பாலக்காட்டில் தலித் சமூகத்தைச் சேர்ந்த பள்ளி முதல்வரை அவமதிக்கும் வகையில், அவருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்களால் பரிசாக சவப்பெட்டி அளிக்கப்பட்டது. கேரளத்தில் கடந்த 13 மாதங்களில் 14 ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 4 பேர், தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
கேரள மாநிலம், அதன் மக்களுக்கு பாதுகாப்பான பகுதியாக இருக்கிறது என்பதற்கான அறிகுறிகளா இவை? எனவே, கேரளத்தில் மக்களைப் பாதுகாக்க முதலில் அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தருண் விஜய் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.