இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

பரபரப்பான சூழ்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் வருகை

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம்

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:45 pm

DIN


சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள்.

அதிமுக பொதுக்குழுவைக் கூட்டுவது குறித்து முடிவெடுக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை கழக அலுவலகத்தில் எம்.பி., எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், தலைமை கழக நிர்வாகிகள் தற்போது தலைமை அலுவலகம் வந்துள்ளனர்.
 
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் எம்எல்ஏக்கள், எம்பிக்கள், மாவட்ட செயலாளர்கள் தலைமை கழக நிர்வாகிகள் என 250 பேர் மட்டுமே கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிடிவி தினகரனுக்கு 21 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் இந்தக் கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அதிமுக அணிகள் இணைப்புக்குப் பிறகு நடக்கும் முதல் எம்எல்ஏக்கள் கூட்டம் இது. இந்தக் கூட்டத்தில் அதிமுக பொதுக் குழுவை எப்போது கூட்டுவது என்பது குறித்து ஆலோசிக்கப்படும். செப்டம்பர் முதல் வாரத்தில் கட்சியின் பொதுக்குழு கூட்டப்படலாம் என்று தெரிகிறது.

மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று எதிர் கட்சிகள் ஆளுநரை சந்தித்து கடிதம் கொடுத்துள்ள நிலையில், அதுகுறித்தும் ஆலோசனை நடத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.