பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கூடுதல் அவகாசம்?

பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிப்பது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வியாழக்கிழமை முடிவெடுக்கும் எனத் தெரிகிறது.
பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கூடுதல் அவகாசம்?
Published on
Updated on
1 min read

பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிப்பது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வியாழக்கிழமை முடிவெடுக்கும் எனத் தெரிகிறது.

அவ்வாறு முடிவு எடுக்கும்பட்சத்தில், மேலும் ஓரிரு மாதங்கள் அவகாசம் வழங்கப்படலாம் எனத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஆதாரைக் கட்டாயமாக்கும் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு முன்னெடுத்து வருகிறது. ஆனால், அதனை எதிர்த்த பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். அதுதொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே, பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதை கட்டாயமாக்கி வருமான வரித் துறை அறிவிப்பு வெளியிட்டது. அதற்காக ஜூலை 31 வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. பின்னர் அந்த அவகாசம் ஆகஸ்ட் வரை நீட்டிக்கப்பட்டது. இருப்பினும் வருமான வரி செலுத்துவோரில் பலர் இன்னமும் ஆதாரை இணைக்காமல் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, மேலும் ஓரிரு மாதங்கள் அதற்கு கால அவகாசம் வழங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வியாழக்கிழமை முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆதார் ரகசியங்கள்: இதனிடையே, மக்களின் ஆதார் விவரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக இருப்பதாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) விளக்கமளித்துள்ளது. சில வெளிநாட்டு நிறுவனங்கள் ஆதார் விவரங்களை கையாளுவதாக எழுந்த குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்கும் விதமாக இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தனிநபர்களின் கைரேகை, கருவிழிப் படலம் உள்பட அனைத்து ரகசியத் தகவல்களும் யுஐடிஏஐ-யின் பிரத்யேக சர்வரில் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com