யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

குஜராத் இரண்டாம் கட்டத் தேர்தல்: 68.7% வாக்குகள் பதிவு! 

குஜராத்தில் இன்று நடந்து முடிந்துள்ள இரண்டாம் கட்ட தேர்தலில் மாலை நான்கு மணி நிலவரப்படி 68.7% வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தெரிய வருகிறது. 

News image
Updated On :14 டிசம்பர் 2017, 2:06 pm

DIN

அகமதாபாத்: குஜராத்தில் இன்று நடந்து முடிந்துள்ள இரண்டாம் கட்ட தேர்தலில் மாலை நான்கு மணி நிலவரப்படி 68.7% வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தெரிய வருகிறது. 

182 உறுப்பினர்களை கொண்ட குஜராத் சட்டபேரவைக்கு டிசம்பர் 9, 14–ந் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி 89 தொகுதிகளுக்கு கடந்த 9–ந்தேதி நடைபெற்ற முதல் கட்ட தேர்தலில், 66.75% வாக்குகள் பதிவானது.

இந்நிலையில் எஞ்சியுள்ள 93 தொகுதிகளுக்ககான இரண்டாவது மற்றும் இறுதிக்கட்டமாக தேர்தல் வாக்சுப்பதிவு இன்று காலை 8  மணிக்குத் துவங்கியது. வாக்காளர்கள் ஆர்வமாக வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். வாக்குப்பதிவானது மாலை 5 மணிவரை நடைபெற்றது.

இறுதி நிலவரப்படி  68.7 சதவிகித வாக்குகள் பதிவாகியிருப்பதாக மாநில தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.