குஜராத் மாநிலத்துக்கான சட்டப்பேரவைத் தேர்தல் காரணமாக கடந்த 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதையடுத்து வருகிற 18-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
இந்நிலையில், அம்மாநிலத்தில் உள்ள 6 மையங்களுக்கு மறுவாக்குப்பதிவு நடத்தப்போவதாக தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்திருப்பதாவது:
குஜராத் தேர்தலின் போது 6 மையங்களில் நடத்தப்பட்ட தேர்தல் ரத்து செய்யப்படுகிறது. இங்குள்ள இயந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவின் போது பதிவான வாக்குகளை நீக்க அங்கு பணியில் இருந்த தேர்தல் அதிகாரிகள் மறந்துவிட்டனர். எனவே இங்கு நடத்தப்பட்ட தேர்தல் ரத்து செய்யப்படுகிறது.
இதையடுத்து டிசம்பர் 17-ந் தேதி (நாளை) இம்மையங்களில் மறுவாக்குப்பதிவு நடத்த திட்டமிட்டுள்ளோம். கவனக்குறைவாக செயல்பட்டு தவறு செய்த அதிகாரிகள் மீது நிச்சயம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு

சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர்

கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!

வெற்றி நிச்சயம் மிதுன ராசிக்கு: தினப்பலன்கள்!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


