கேரளாவில் 'திடீர் ' சோதனை: மதுபோதையில் பள்ளி வாகனம் ஓட்டிய  25 ஓட்டுனர்கள் கைது! 

கேரளாவின் நான்கு முக்கிய மாவட்டங்களில் இன்று காலை காவல்துறையினர் நடத்திய 'திடீர்' சோதனையில் குடித்து விட்டு பள்ளிவாகனங்களை ஓட்டிய 25 ஓட்டுனர்கள் கைது செய்யப்பட்டனர்.
கேரளாவில் 'திடீர் ' சோதனை: மதுபோதையில் பள்ளி வாகனம் ஓட்டிய  25 ஓட்டுனர்கள் கைது! 
Published on
Updated on
1 min read

கொச்சி: கேரளாவின் நான்கு முக்கிய மாவட்டங்களில் இன்று காலை காவல்துறையினர் நடத்திய 'திடீர்' சோதனையில் குடித்து விட்டு பள்ளிவாகனங்களை ஓட்டிய 25 ஓட்டுனர்கள் கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக கேரள காவல்துறை ஐ.ஜி விஜயன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

கேரளாவின் பல்வேறு பகுதிகளில்  பள்ளிவாகனங்களை ஓட்டுபவர்கள் மது அருந்தி விட்டு வாகனங்களை இயங்குவதாகவும், மதுபோதையில் மாணவிகளிடம் தவறாக நடந்து கொள்வதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. உளவுத்துறை அறிக்கைகளும் இதனை உறுதிப்படுத்தின.

அதனைத் தொடர்ந்து இன்று கேரளாவின் நான்கு முக்கிய மாவட்டங்களான கோட்டயம், இடுக்கி, ஆலப்புழ மற்றும் கொச்சி ஆகிய இடங்களில், வெவேறு பகுதிகளில் இன்று காலை 8.30 மணிக்கு தங்கள் சோதனையை தொடங்கினர்.

இந்த சோதனையில் இதுவரை 25 வாகன ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.   

இவ்வாறு விஜயன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com