மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

உ.பி சட்டசபை தேர்தல்: சமாஜ்வாடி கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு!

உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் போட்டியிடும் சமாஜ்வாடி கட்சியின் தேர்தல் அறிக்கையை, உத்தரப்பிரதேச முதல்வரும், அக்கட்சியின் தேசிய தலைவர் அகிலேஷ் யாதவ் ...

News image
Updated On :29 ஜனவரி 2024, 10:48 am

DIN

லக்னோ: உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் போட்டியிடும் சமாஜ்வாடி கட்சியின் தேர்தல் அறிக்கையை, உத்தரப்பிரதேச முதல்வரும், அக்கட்சியின் தேசிய தலைவர் அகிலேஷ் யாதவ் இன்று வெளியிட்டார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இம்முறை உத்தரப்பிரதேசம் மாநிலத்தை ஆளும் சமாஜ்வாடி கட்சி, காங்கிரசுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. சமாஜ்வாடி கட்சி 298 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 105 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

இந்நிலையில் சமாஜ்வாடி கட்சியின் தேர்தல் அறிக்கையை, உத்தரப்பிரதேசம் முதல் மந்திரியும், அக்கட்சியின் தேசிய தலைவருமான அகிலேஷ் யாதவ் லக்னோவில் நடந்த பொதுக்கூட்டத்தில் இன்று வெளியிட்டார்.

அந்த தேர்தல் அறிக்கையில் சிறப்பம்சங்களாக குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களாவன:

உத்தரபிரதேச மாநில வளர்ச்சியில் தனிக்கவனம் செலுத்தப்படும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள மாணவர்களுக்கு லேப்டாப் கொடுக்கும் திட்டம் விரிவுப்படுத்தப்படும், மூத்த குடிமக்களுக்கு ஓய்வூதியம் வழங்குதல், காவல் துறையை நவீனப்படுத்தப்படும் திட்டம், பறக்கும் சாலைகள் அமைத்தல், ஜனேஷ்வர் மிஷ்ரா மாதிரி கிராம முன்னேற்ற திட்டம், விவசாயிகளுக்கு உரம், விதை ஆகியவை எளிய முறையில் பெறுவதற்கான திட்டம் ஆகியவை தேர்தல் வாக்குறுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசிய அகிலேஷ் யாதவ், ” கடந்த முறை ஆட்சியில் இருந்த பொழுது நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். எனவே நமது தொண்டர்கள் கடந்த ஐந்து ஆண்டுகால அரசின் சாதனைகளை மக்களிடம் தவறாமல் எடுத்துச் சொல்ல வேண்டும்’ என்று தெரிவித்தார்.

தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்வில் சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர்களான முலாயம் சிங் யாதவ், மற்றும் ஷிவ் பால் யாதவ் ஆகிய இருவர், அவர்களின் ஆதரவாளர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.