ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!
/

உங்களை அடித்துக் கொல்ல என்னால் முடியும்: காஷ்மீரில் எம்எல்ஏவை மிரட்டிய அமைச்சர்

ஜம்மு- காஷ்மீர் சட்டப் பேரவையில் சரக்கு -  சேவை வரி (ஜிஎஸ்டி) தொடர்பான விவாதம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றபோது, தேசிய மாநாட்டுக் கட்சி எம்எல்ஏ தேவேந்தர் ராணாவிடம் 'உங்களை என்னால்

News image
Updated On :4 ஜூலை 2017, 9:05 pm

DIN

ஜம்மு- காஷ்மீர் சட்டப் பேரவையில் சரக்கு -  சேவை வரி (ஜிஎஸ்டி) தொடர்பான விவாதம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றபோது, தேசிய மாநாட்டுக் கட்சி எம்எல்ஏ தேவேந்தர் ராணாவிடம் 'உங்களை என்னால் இங்கேயே அடித்துக் கொல்ல முடியும்' என்று மாநில அமைச்சர் இம்ரான் அன்சாரி மிரட்டும் தொனியில் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு கடந்த 1- ஆம் தேதி முதல் அமலுக்கு வந்து விட்டது. எனினும், ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் இந்த வரிவிதிப்பு இன்னும் அமலுக்கு வரவில்லை. அந்த மாநில சட்டப் பேரவையில் மாநில ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றப்படாததே இதற்குக் காரணமாகும்.
இந்த நிலையில், அரசமைப்புச் சட்டம் காஷ்மீருக்கு அளித்துள்ள சிறப்பு அந்தஸ்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சில மாற்றங்களுடன் மாநில ஜிஎஸ்டி மசோதாவை நிறைவேற்றுவது குறித்து விவாதிக்க, ஜம்மு- காஷ்மீர் சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய எதிர்க்கட்சியான தேசிய மாநாட்டுக் கட்சியைச் சேர்ந்த தேவேந்தர் ராணா 'அவையின் உறுப்பினர்கள் அரசியல் நோக்கங்களுக்கு அப்பாற்பட்டு மாநிலத்துக்கும், அதன் மக்களுக்கும் எது நல்லதோ அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். அந்த வகையில், ஜிஎஸ்டி வரிவிதிப்பின் இப்போதைய வடிவத்தை நான் எதிர்க்கிறேன். ஏனெனில் அது மாநிலத்துக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தை சீர்குலைத்துவிடும்' என்று தெரிவித்தார்.
அப்போது மாநில தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் இம்ரான் அன்சாரி குறுக்கிட்டுப் பேசினார். அவர் தனது பேச்சின்போது உறுப்பினர் ராணா செய்து வரும் வர்த்தகத்தில் விதிமீறல்கள் உள்ளதாக குற்றம்சாட்டினார். அந்தக் குற்றச்சாட்டுகளை ராணா மறுத்தார்.
இதனால் கோபமடைந்த அமைச்சர் இம்ரான் அன்சாரி 'உங்களை இங்கேயே அடித்துக் கொல்ல என்னால் முடியும். உங்களது மோசடி வர்த்தகங்கள் அனைத்தும் எனக்குத் தரியும். உங்களை விடப் பெரிய திருடன் யாரும் இருக்க முடியாது' என்று கூறினார். அவரது இந்தப் பேச்சுக்கு தேசிய மாநாட்டுக் கட்சி எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.