குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

பொது மக்களுக்கு ஆதார் பதிவு செய்ய மறுத்தால் நடவடிக்கை: சேவை மையங்களுக்கு யுஐடிஏஐ எச்சரிக்கை

தொழில்நுட்பக் கோளாறு அல்லது ஏதேனும் போலி காரணத்தைத் தெரிவித்து, பொது மக்களுக்கு ஆதார் பதிவு செய்ய மறுப்பு தெரிவித்தால், அது ஊழல் நடவடிக்கையாகக் கருதப்பட்டு நடவடிக்கை

News image
Updated On :4 ஜூலை 2017, 7:47 pm

DIN

தொழில்நுட்பக் கோளாறு அல்லது ஏதேனும் போலி காரணத்தைத் தெரிவித்து, பொது மக்களுக்கு ஆதார் பதிவு செய்ய மறுப்பு தெரிவித்தால், அது ஊழல் நடவடிக்கையாகக் கருதப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆதார் சேவை மையங்களுக்கு இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தில்லியில் அந்த ஆணையத்தின் தலைமைச் செயல் அதிகாரி அஜய் பூஷண் பாண்டே, பிடிஐ செய்தியாளருக்கு அளித்த பேட்டி வருமாறு:
யுஐடிஏஐ இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள சேவை மையங்களுக்கு பொது மக்கள், ஆதார் பதிவு செய்ய செல்லும்போது, தொழில்நுட்பக் கோளாறு இருப்பதாகவோ அல்லது ஏதேனும் ஒரு போலி காரணத்தையோ தெரிவித்து, அவர்களுக்கு ஆதார் பதிவு செய்ய மறுப்பு தெரிவிக்கப்படுவதாக ஏராளமான புகார்கள் வந்துள்ளன. இது ஊழல்களுக்கு இணையான செயலாகும். தொழில்நுட்பக் கோளாறு இருப்பதாக காரணம் தெரிவித்து, ஆதார் பதிவு செய்யாமல் பொது மக்களை திருப்பி அனுப்புவதற்கு எந்த காரணங்களும் இல்லை.
ஆதார் பதிவு செய்ய மறுப்பது, ஊழல் செயலாகும். இதுதொடர்பாக அனைத்து ஆதார் சேவை மையங்கள், ஆபரேட்டர்களுக்கு எங்களது கள அதிகாரியின்மூலம் நாங்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளோம். மேலும், ஆதார் பதிவு செய்ய மறுப்புத் தெரிவிக்கும் சேவை மையங்கள், ஆபரேட்டர்கள் குறித்து புகார் தெரிவிக்கும்படியும் பொது மக்களை கேட்டுக் கொள்கிறோம். அப்போதுதான் சம்பந்தப்பட்ட சேவை மையங்கள் மீது கடும் நடவடிக்கை எங்களால் எடுக்க முடியும். விதிகளை மீறும் ஆதார் சேவை மையங்களுக்கு முதல்கட்டமாக ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். பிறகு அதே குற்றத்தை மீண்டும் சேவை மையங்கள் செய்தால், ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். அதன்பிறகும், அதே செயலை ஆதார் சேவை மையங்கள் தொடர்ந்தால், அதற்கு தடை விதிக்கப்படும்.
பொது மக்களின் தொலைபேசிகளை தொடர்பு கொள்ளும் சிலர், வங்கிகள், தொலைபேசி நிறுவனங்கள் அல்லது அரசுத் துறை போன்றவற்றில் தாங்கள் பணியாற்றுவதாக தெரிவித்து, ஆதார் எண், பாதுகாப்பு எண் போன்றவற்றை கேட்பதாக புகார்கள் வந்துள்ளன. இத்தகைய தொலைபேசி அழைப்புகளை நம்பி, பொது மக்கள் தங்களது ஆதார் எண்ணையோ, பாதுகாப்பு எண்ணையோ தெரிவிக்க வேண்டாம் என்று பொது மக்களை கேட்டுக் கொள்கிறேன். இதேபோல், அங்கீகாரமில்லாத இணையதளங்களில் ஆதார் எண், பாதுகாப்பு எண் போன்றவற்றை பதிவு செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
ஆதார் பதிவு செய்யும் சேவையில் ஈடுபட்டிருக்கும் ஆபரேட்டர்கள், எங்களிடம் 10 நாள்களுக்கு ஒருமுறை தங்களது பதிவை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அவர்களால் அந்த சேவையை தொடர்ந்து அளிக்க முடியும் என்று அஜய் பூஷண் பாண்டே கூறினார்.
ஆதார் திட்டத்தை செயல்படுத்தி வரும் அமைப்பாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் உள்ளது. இதன்கீழ் ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கும் பொது மக்கள் ஒவ்வொருவருக்கும் பிரத்யேக 12 இலக்க எண்களுடன் கூடிய அட்டையை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அளிக்கிறது. இதுநாள் வரையிலும், நாடு முழுவதும் 115 கோடி பேருக்கு ஆதார் அட்டைகளை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அளித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.