திருவனந்தபுரம்: கேரள மாநில தலைநகரமான திருவனந்தபுரத்தில் பெண்களின் பாதுகாப்புக்கென 'ஒரு நாள் வீடு' என்னும் சிறப்பு திட்டத்தினை அம்மாநில அரசு அறிமுகப்படுத்தியிருக்கிறது.
இது தொடர்பாக அம்மாநில சுகாதாரம் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா செய்தியாளர்களிடம் பேசியதாவது:
ஒவ்வொரு நாளும் தேர்வுகள் எழுதுவதற்காகவோ, நேர்முகத் தேர்வுகளில் பங்கேற்பதன் பொருட்டோ அல்லது கூட்டங்களில் பங்கேற்பதற்காகவோ எத்தனையோ பெண்கள் மாநில தலைநகரான திருவனந்தபுரம் வந்து செல்கின்றனர். அவ்வாறு வருபவர்கள் குறுகிய கால அளவில் தங்கிச் செல்வதற்காக 'ஒரு நாள் வீடு' என்னும் திட்டம் கொண்டு வரப்படுகிறது.
பாதுகாப்பான தங்குமிடம் மற்றும் நல்ல உணவு ஆகியவற்றினை குறைந்த செலவில் வழங்குவதே இந்த திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும்.
நகரின் மையத்தில் அமைந்துள்ள தாம்பனூரில் இருக்கும் கேரளா மாநில சாலை போக்குவரத்துக்கு கழக அலுவலகத்தன் ஏழாவது தளம் இதற்காக கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் இதற்காக ரூ.30.56 லட்சம் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது
இந்த திட்டமானது மாநில அரசின் சமூக நலத்துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் மகளிர் முன்னேற்றத் திட்டங்களின் ஒரு பகுதியாகும்.
இவ்வாறு ஷைலஜா தனது பேட்டியில் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்

திரிணமூல் காங்கிரஸ் நிலைகுலைந்துவிட்டது: பிரதமா் மோடி

ரைபகினா, ஆஸ்டபென்கோ முன்னேற்றம்

ஒரே நபா் இரண்டு வாக்குச்சாவடிகளில் வாக்களிப்பு: தோ்தல் அலுவலரிடம் புகாா்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


